This Article is From Nov 25, 2019

’அந்த 4 பேர் தான் ஆபரேஷன் கமலுக்கு காரணம்’; பாஜகவை சாடும் சஞ்சய் ராவத்

ஒட்டுமொத்த ஆபரேஷனும், குர்கானில் உள்ள ஒரு விடுதியில் வைத்தே நடத்தப்பட்டுள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸை சார்ந்தவர்கள் நேற்றிரவு ’மீட்பு பணியில்’ ஈடுபட்டனர் என்றார் சஞ்சய் ராவத்.

’அந்த 4 பேர் தான் ஆபரேஷன் கமலுக்கு காரணம்’; பாஜகவை சாடும் சஞ்சய் ராவத்

உங்களிடம் பெரும்பான்மை இருக்கும்போது, எதற்காக ’ஆபரேஷன் கமலை’ முன்னெடுக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

Mumbai (Maharashtra):

மகாராஷ்டிராவில் ஆபரேஷன் கமலை முன்னெடுத்தது 4 பேர் தான். அவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் போலீஸ் ஆகியோர் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

உங்களிடம் பெரும்பான்மை இருக்கும்போது, எதற்காக 'ஆபரேஷன் கமலை' முன்னெடுக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் போலீஸ் ஆகிய 4 பேர் தான் ஆபரேஷன் கமலை முன்னெடுத்தவர்கள். 

இந்த ஒட்டு மொத்த ஒட்டுமொத்த ஆபரேஷனும், குர்கானில் உள்ள ஒரு விடுதியில் வைத்தே நடத்தப்பட்டுள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸை சார்ந்தவர்கள் நேற்றிரவு 'மீட்பு பணியில்' ஈடுபட்டனர் என்றார் சஞ்சய் ராவத். 

மேலும், உச்சநீதிமன்றம் மீது முழு நம்பிக்கை உள்ளது, அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்த பலரும் தற்போது, மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே திரும்புகின்றனர். குர்கான் விடுதியில் உள்ள எம்எல்ஏக்கள் கூறும்போது, பாஜக தங்களுக்கு கொடுத்த அழுத்தத்தையும், சலுகைகளையும் பற்றி கூறியுள்ளனர் என்றார்.

கடந்த சனிக்கிழையன்று மகாராஷ்டிரா அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக ஆட்சி அமைக்க பாஜகவுக்குஆளுநர் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்தகுடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டது. ,

பின்னர், காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ்
முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

இதையடுத்து, மகாராஷ்டிராவில் எதிர்பாராத விதமாக ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 

.