Pune: இறங்க வேண்டிய இடம் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தான் டிரைவர் தூங்கி எழுந்துள்ளார். (File)
ஹைலைட்ஸ்
- உபர் கால் டாக்சி டிரைவர் தூங்கி வழுந்துள்ளார்.
- வாடிக்கையாளர் பெண்மணியே காரை ஓட்டி சென்றுள்ளார்.
- இறங்க வேண்டிய இடம் வருவதற்கு அரை மணி நேரம் முன்பு தான் எழுந்துள்ளார்.
Pune: உபர் கால் டாக்சி மூலம் புனேவில் இருந்து மும்பைக்கு சென்ற பெண் ஒருவர் டிரைவர் தூங்கி விழுந்ததால், காரை தானே ஓட்டிச்செல்ல வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்.21ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தேஜ்ஸ்வினி திவ்யா நாயக் என்ற அந்த பெண், சமூகவலைதங்களில் வீடியோவுடன் பதிவு செய்ததை தொடர்ந்து, தற்போது இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த பிப்.21ம் தேதி பிற்பகல் 1 மணி அளவில் புனேவில் இருந்து மும்பை அந்தேரியில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல நாயக் என்ற அந்த பெண் உபரில் டாக்சி புக் செய்துள்ளார்.
அவரை அழைத்துச்செல்ல வந்த கார் ஓட்டுநன் தொடக்கத்தில் மொபைலில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே வந்துள்ளார். இதனையடுத்து, நாயக், கார் ஓட்டும் போது போன் பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பேசுவதை நிறுத்திய அந்த ஓட்டுநர், சற்று நேரத்தில் தூங்கி விழத் தொடங்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த ஓட்டுநர் மற்றொரு காரையும், சாலை தடுப்பையும் இடித்துள்ளார். இதையடுத்து, வேறு வழியில்லாமல், நாயக் தான் காரை ஓட்டுவதாகவும், ஓட்டுநரை சற்று நேரம் ஓய்வு எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரை மணி நேரம் மட்டும் ஓய்வெடுத்துக்கொள்ளும் படியும் அதற்கு மேல் தன்னால் கார் ஓட்ட முடியாது என்பதையும் அவர் தெளிவாக கூறியுள்ளார்.
இதையடுத்து, பின் இருக்கைக்கு சென்று படுத்துகொண்ட அந்த ஓட்டுநர் தூங்காமல், மீண்டும் போனில் பேசிய படியும், நாயக்கின் கார் ஓட்டும் திறனையும் பாரட்டிய படி வந்துள்ளார்.
பின்னர் சிறுது நேரம் கழித்து அந்த ஓட்டுநர் தூங்கியதற்கு பின்னர் நாயக் அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வைத்துள்ளார். இதைதொடர்ந்து, தற்போது அதனை நாயக் சமூகவலைதளங்களில் வெளியிட்டதுடன் சம்மந்தப்பட்ட அந்த நிறுவனத்தையும் அதில் டேக் செய்துள்ளார்.
மேலும், இறங்க வேண்டிய இடம் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தான் டிரைவர் தூங்கி எழுந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக உபர் நிர்வாகியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது மிகவும் வருந்ததக்க சம்பவம், இதுதொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்ததும், அந்த ஓட்டுநரின் பங்களிப்பை இடைநிறுத்தம் செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.