ஒட்டுமொத்தமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை இன்று தாண்டியுள்ளது.
Mumbai: நாட்டிலேயே கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மும்பையில் மட்டும் 55,451 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மொத்தம் 47,796 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,718 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். உயிரிழந்தவர்கள், குணம் அடைந்தவர்களைத் தவிர்த்து 49,616 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் நோய் பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் சதவீதம் 47.3 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 3.7 சதவீதமாக இருக்கிறது.
மாநிலத்தில் 75,067 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 1,553 தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 31-ம்தேதியில் இருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சமூக விலகலை கடைபிடிக்கும்படி மாநில அரசு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே மாநிலத்தில் மீண்டும் முழுமையான பொது முடக்கம் ஏற்படுத்தப்படும் என தகவல்கள் பரவின. இதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 'மீண்டும் பொது முடக்கத்தை ஏற்படுத்த மாட்டோம். மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டாம். அரசு காட்டும் விதிகளை கடைபிடிக்க வேண்டும்.' என்று கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை இன்று தாண்டியுள்ளது.