Death Anniversary Of Mahatma Gandhi 2019: மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
New Delhi: இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியின் நினைவு நாளை இந்திய அரசு தியாகிகளின் தினமாகக் கொண்டாடுகிறது. 1921-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக காந்திஜி பொறுப்பேற்றபின் பல சமூக காரணங்களுக்காக கூட்டங்களை ஒருங்கிணைத்தார்.
தேசிய அளவில் சுதந்திரம், சுயராட்சியத்திற்காக பல கூட்டங்களை முன்னெடுத்தார். பிரிட்டீஷ் அரசின் காலனிய ஆட்சியின் அடக்குமுறையை எதிர்ப்பதற்கு அஹிம்சை முறையை போராட்டத்திற்கான கருவியாக தேர்ந்தெடுத்தார். காந்தி 78வது வயதில் நாதுராம் கோட்சே என்ற இந்து வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வாரத்தின் தொடங்கத்தில் ‘மான் கி பாத்' நிகழ்ச்சி தொடங்கும் முன் காந்திஜிக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தி மிகவும் தீர்மானமாகவே வன்முறையை தவிர்த்து அஹிம்சையே தேர்ந்தெடுத்தார். இதை அரசியல் கருவியாக பயன்படுத்தினார். வன்முறையினால் கிடைக்கும் தீர்வுகள் நிரந்தரமானது அல்ல என உறுதியாக நம்பினார்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் உப்புக்கு வரி விதிக்கப்பட்டது. இதனால் உப்பு சத்தியாகிரகம் என்ற போராட்டத்தை தொடங்கியனார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து கடற்கரைப் பகுதியான தண்டி வரை நடந்து சென்று உப்பு காய்ச்சினார். இந்தப் போராட்டத்திற்கு பின் உப்பின் மீதான வரி நீக்கப்பட்டது. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் அரசு எச்சரிக்கை விடுத்தது பாதுகாப்பு கொடுக்கவும் முன்வந்தது. ஆனால், அந்தப் பாதுகாப்பை மகாத்மா புறக்கணித்தார். அந்த பாதுகாப்பை ஏற்றிருந்தால் கூட காந்தி அழித்தொழிப்பை தடுத்திருக்க முடியும் என்று காந்திஜியின் செகரட்டிரியாக இருந்த கல்யாணம் என்பவர் பிடிஐக்கு தெரிவித்திருந்தார். காந்தியின் நினைவு நாளான இன்று அவரின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோமாகா…