This Article is From Jan 30, 2019

காந்தியின் நினைவு நாளையொட்டி ‘தீண்டாமை உறுதிமொழி’; முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு!

தேசத் தந்தை காந்தியடிகளின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

காந்தியின் நினைவு நாளையொட்டி ‘தீண்டாமை உறுதிமொழி’; முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு!

முதல்வர் தலைமையேற்று ‘தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி’-யை வாசித்தார்.

ஹைலைட்ஸ்

  • தேசப் பிதா காந்தியின் நினைவு நாள் இன்று
  • தலைமைச் செயலகத்தில் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது
  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார்

தேசத் தந்தை காந்தியடிகளின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை, ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் தலைமைச் செயலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அப்பபோது முதல்வர் தலைமையேற்று ‘தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி'-யை வாசித்தார். ‘இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள, இந்திய குடிமகனாகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ, சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல்முறை என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று உளமாற உறதியளிக்கின்றேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கு இணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தில் உருவாக்குவதில் நேர்மையுடனும்  உண்மையடனும் பணியாற்றுவது எனது கடமை என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழு பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக் காட்டாக விளங்கும் என்றும் இதன் மூலம் உளமாற உறுதியளிக்கின்றேன்' என்று முதல்வர் சொல்ல சொல்ல மற்றவர்களும் அவருக்குப் பின்னர் அதைச் சொல்லி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 

.