This Article is From Oct 02, 2019

''காந்தி உயிரோடு இருந்திருந்தால் வேதனைப்பட்டிருப்பார்'' - மத்திய அரசை விமர்சித்த சோனியா!!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டில் காங்கிரஸ் சார்பாக டெல்லியில் பேரணி நடைபெற்றது. கட்சி அலுவலகத்தில் தொடங்கி, காந்தி நினைவிடம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பேரணி சென்றது.

''காந்தி உயிரோடு இருந்திருந்தால் வேதனைப்பட்டிருப்பார்'' - மத்திய அரசை விமர்சித்த சோனியா!!

ஆர்.எஸ்.எஸ்ஸை சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

New Delhi:

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வருவதை காந்தி உயிரோடு பார்ர்த்திருந்தால் வேதனைப் பட்டிருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் அரசு சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து தொண்டர்களுடன் பேரணியாக சென்ற சோனியா காந்தி, காந்தி நினைவிடத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சோனியா காந்தி கூறியதாவது-

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் காட்சிகளை காந்தி பார்த்தால் வேதனை அடைவார். தவறான அரசியலில் ஈடுபட்டிருக்கும் பாஜகவினர் ஒருபோதும் காந்தியை புரிந்து கொள்ள மாட்டார்கள். 
 

இவ்வாறு அவர் கூறினார். பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில்,'உண்மையைப் பேசவேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்பது காந்தியின் கட்டளை. எனவே பாஜக முதலில் உண்மையாக நடந்து கொண்டு, பின்னர் காந்தியைப் பற்றி பேச வேண்டும்' என்றார். 

காந்தியின் பிறந்த நாளைப்போன்று, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
 

.