This Article is From Nov 20, 2019

Mahinda Rajapakse இலங்கையின் புதிய பிரதமர் - அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவிப்பு!

'வரும் வியாழக் கிழமை காலை, தற்போது இலங்கை பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்வார்'

Mahinda Rajapakse இலங்கையின் புதிய பிரதமர் - அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவிப்பு!

சில நாட்களுக்கு முன்னர் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய வெற்றி பெற்றார்

Colombo:

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச, தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ச-வை நாட்டின் பிரதமராக பதவியேற்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தமழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் இரு சகோதரர்களும் இணைந்து, பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் என்று ஒரு சாரர் அவர்களை புகழவும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட சர்ச்சை இருவரையும் வட்டமிட்டு வரும் வேளையில்தான், சில நாட்களுக்கு முன்னர் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய வெற்றி பெற்றார். தற்போது மகிந்த, பிரதமராக பதவியேற்க உள்ளதாக செய்தி வந்துள்ளது. 

வரும் வியாழக் கிழமை காலை, தற்போது இலங்கை பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அதைத் தொடர்ந்து மகிந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்றும் இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் விஜயனந்தா ஹெராத் தகவல் தெரிவித்துள்ளார். 

.