சீனாவின் பீரங்கிகளும், இந்தியாவின் தயார் நிலையும்
New Delhi: கிழக்கு லடாக்கின் பாங்காங் பகுதியில் சீன ராணுவம் பீரங்களை களம் இறக்கியுள்ளது. இதனை நுட்பமாக கவனித்து வரும் இந்தியா, பதிலடிக்கு தயார் நிலையில் உள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல் உருவாகியுள்ளது. சீனாவின் ஒவ்வொரு அசைவுகளையும் முன்கூட்டியே கணித்து அதன்படி, இந்தியா முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
சீன ராணுவம் தாழ்வான பகுதிகள், நீர் நிலைகளைக் கட்டுப்படுத்தி வரும் வேளையில், உயரமான மலைப்பகுதிகளை இந்திய ராணுவம் தன்வசப்படுத்திவிட்டது. இதனால், சீனாவின் செயல்பாடுகளை உடனுக்குடன் இந்திய ராணுவம் அறிந்து கொள்கிறது.
குறிப்பாக பாங்காங் திசோ அருகேயுள்ள பிளாக் டாக், ஹெல்மேட், மால்டோ ஆகிய பகுதிகளை சீனா தனது படைகளை களம் இறக்கியுள்ளது. மேலும், சக்திவாய்ந்த பீரங்கிகள், நவீன துப்பாக்கிகள், சிறுசிறு ஆயுதங்களை குவித்துள்ளது. மலை முகடுகள், அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் இந்த பீரங்கிகளை களம் இறக்கியுள்ளது.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவமும் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும், சீனாவின் மற்ற ஆயுதங்களை விட சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகளை இந்தியா களம் இறக்குகிறது.