This Article is From Jun 20, 2019

மேக் இன் இந்தியா திட்டம்: 6 நீர் மூழ்கி கப்பல்கள் தயாரிக்க ரூ. 45 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!!

இந்திய நிறுவனங்கள் நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க ஆர்வம் காட்டுகின்றன. அவற்றை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அணுகி கப்பல்களை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம்: 6 நீர் மூழ்கி கப்பல்கள் தயாரிக்க ரூ. 45 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!!

6 டீசல் எலக்ட்ரிக் நீர் மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன.

New Delhi:

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர் மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 75-ஐ என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனங்கள் நீர் மூழ்கி கப்பல்களை தயாரித்து வழங்கும். இதற்கு ரூ. 45 ஆயிரம் கோடியை ஒதுக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நீர் மூழ்கி கப்பல்களை தயாரிப்பதன் மூலம் பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்குவதில் இந்தியா அடுத்த இலக்கை நோக்கிச் செல்லும். தற்போதுள்ள நவீன சாதனங்களை உள்ளடக்கியதாக நீர் மூழ்கி கப்பல்கள் உருவாக்கப்படும். 

இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், நீர் மூழ்கி கப்பல்களை உருவாக்குவது, மாதிரிகளை அமைப்பது உள்ளிட்டவற்றில் இந்தியா முன்னோடியாக மாறி விடும். 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டம் இரண்டாவது முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 

முன்னதாக கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. 

.