Read in English
This Article is From Apr 23, 2020

'இந்த வைரஸ் வெகு நாட்கள் நம்மோடு இருக்கும்' - எச்சரிக்கும் உலக சுகாதார மையம்

கடந்த ஜனவரி 30ம் தேதியே அணைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Advertisement
உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உலகளாவிய எண்ணிக்கை 175,000-ஐ கடந்துவிட்டது

Highlights

  • ஐ.நா. சுகாதார நிறுவனம் வைரஸ் தொற்றால், உலகளாவிய அவசர நிலையை
  • கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருந்ததாக நினைத்த சில நாடுகளில்
  • ஜெனீவாவில் நடந்த ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ்
Geneva, Switzerland:

உலகில் பரவி வரும் இந்த COVID-19 தொற்று நோய் இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும் என்று உலக சுகாதார மையம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும், இன்றளவும் உலகில் உள்ள பல நாடுகள் இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன என்று எச்சரித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருந்ததாக நினைத்த சில நாடுகளில் புதிதாக தொற்றுகள் ஏற்பட தொடங்கியுள்ளன என்றும், அதே நேரத்தில் ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் சிக்கலான போக்கு தான் நிலவுகிறது என்றும் தெரிவித்தார். 

மேலும் ஐ.நா. சுகாதார நிறுவனம் வைரஸ் தொற்றால், உலகளாவிய அவசர நிலையை கடந்த ஜனவரி 30-ம் தேதி அறிவித்தது என்றும் அது சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் அவர் தெரிவித்தார். 

ஜெனீவாவில் நடந்த ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ், "மேற்கு ஐரோப்பாவில் பெரும்பாலான இடங்களில், கொரோனா தொற்றுநோயின் தாக்கம் சீராக அல்லது குறைந்து வருகிறது" என்று கூறினார். 

Advertisement

மேலும் "எண்ணிக்கை குறைவாக இருக்கின்றபோதும், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் புதிய தொற்றுக்கள் உருவாவதை காணமுடிகின்றது" என்று கூறினார். உலகளவில் "பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோய்களின் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. மேலும் கொரோனா காரணமாக ஆரம்பகட்டத்தில் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் தற்போது மீண்டும் சில பாதிப்புக்களை காணமுடிகிறது என்று கூறினார்.

"எந்த தவறையும் செய்துவிடாதீர்கள்" என்று குறிப்பிட்ட அவர், "நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் என்றும், இந்த வைரஸ் நம்மோடு நிறைய காலம் இருக்கப்போகிறது" என்றும் அவர் தெரிவித்தார்". 

Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உலகளாவிய எண்ணிக்கை 175,000-ஐ கடந்துவிட்டது. ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தொகுத்த அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொற்றுநோய் முதன்முதலில் தோன்றியதிலிருந்து இதுவரை 2.5 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் உலக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையம் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்ததா ? என்று டெட்ரோஸ்யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உலக நாடுகள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் அளவிற்கு முன்னதாகவே கடந்த ஜனவரி 30ம் தேதியே அணைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Advertisement