This Article is From Feb 18, 2020

“இதுதான் ஜமீன்தனம்!”- ஒரே அறிக்கையில் தி.மு.க, வி.சி.க-வை க்ளோஸ் செய்த கமலின் ‘மய்யம்’!!

RS Bharathy row - "குறிப்பாக “இடதுசாரிகள்” தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது நிதியல்ல வேறொன்று என்றும் நாளை ஆர் எஸ் பாரதி கூறலாம்"

“இதுதான் ஜமீன்தனம்!”- ஒரே அறிக்கையில் தி.மு.க, வி.சி.க-வை க்ளோஸ் செய்த கமலின் ‘மய்யம்’!!

RS Bharathy row - "இந்த நேரத்தில் திமுகவோடு கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் செஞ்சோற்றுக்கடனால் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது"

RS Bharathy row - தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதி, சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர்கள், ஊடகங்கள் மற்றும் நீதிமன்றத்தைப் பற்றிப் பேசியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

தி.மு.க ஒருங்கிணைத்த கட்சிக் கூட்டத்தில் பேசிய பாரதி, “இந்த நாட்டிற்குள் எவன் எவனோ நுழைந்துவிட்டு, நாய்கள், பேய்கள் எல்லாம் பேசத் துவிங்கிவிட்டன. எச்.ராஜா போன்ற ஆட்களெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள்.

வட இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து மாநிலத்தவர்களும் முட்டாள்களாகவே இருக்கிறார்கள். அறிவே கிடையாது. ஹரிஜன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட ஐகோர்ட் நீதிபதியாக இல்லை. இன்று வரை ஒருவர் கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக இல்லை. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள். அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று சர்ச்சையாகப் பேசினார். 

இந்தப் பிரச்சினை தமிழக அளவில் கனன்று கொண்டிருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின், ஆதி திராவிடர் நல அணியின் மாநிலச் செயலாளர், ஜெகதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணல் அம்பேத்கர் பெற்றுத்தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம்.

அவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது.

அப்படியிருக்கையில் சட்டம் கொடுத்த வாய்ப்பைப் பிச்சை போட்டதாக தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அந்தக்கால “ஜமீன் தனத்தோடு” ஆணவமாகக் கருத்துக் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தனது கட்சி செயலாளர் கூறிய கருத்து திரு.ஸ்டாலின் அவர்களுக்கு மிகச்சாதாரணமான ஒன்றாகத் தோன்றியிருப்பது வருந்தத்தக்கது.
திரு ஆர் எஸ் பாரதி வருத்தம் தெரிவித்தால் போதுமானது என்று நினைத்தது கண்டனத்திற்குரியது.

இந்த நேரத்தில் தி.மு.க.வோடு கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் செஞ்சோற்றுக்கடனால் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது. இவர்கள் குணம் எப்படியானது என்பதை “தாழ்த்தப்பட்ட மக்கள்” மட்டுமல்ல “தமிழக மக்களே” உணர வேண்டிய நேரம் இது.

குறிப்பாக “இடதுசாரிகள்” தேர்தல் நேரத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது நிதியல்ல வேறொன்று என்றும் நாளை ஆர் எஸ் பாரதி கூறலாம். மாற்றார் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று கூறிய அண்ணா ஆரம்பித்த இயக்கம் ஆணவத்தில் உச்சியிலிருந்து அழிவின் பள்ளத்தாக்கில் விரைவில் விழும்” எனக் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

.