சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் புதுச்சேரிக்கான நிர்வாகிகளை நியமித்த பின்னர் பேசிய கமல்ஹாசன்,
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் காத்திருக்கிறது. தமிழகத்தின் நலனுக்காக எப்படியெல்லாம் செயல்பட முடியுமோ? அவ்வாறெல்லாம் செயல்படுவோம். அதன் அடிப்படையிலேயே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறொம்.
புதுச்சேரியில் செய்யப்பட வேண்டியவற்றை சொல்லிச் சொல்லி செய்து காட்டுவோம். செய்யக்கூடிய ஒன்றை, ஏன் செய்யவில்லை என்பது தான் எங்களது குமுறல்.
எங்களைப்போல மக்களுக்கும் ஒரு கடமை உண்டு, மக்களும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். ஒரு நல்ல அரசை அரியணையில் ஏற்றி வைத்தால் கணக்கில் அடங்காத நலன்களைப் பெற முடியும். திருடனைத் திருடன் என்றால் தான் நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசம் தெரியும் என்றார்
மேலும், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.