Read in English
This Article is From Apr 11, 2019

மலையாள நடிகர் சன்னி வையன் திருமணம் குருவாயூரில் நடந்தது…! புகைப்படங்கள் உள்ளே

இவர்களின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது

Advertisement
Entertainment Posted by

சன்னி வையன் மற்றும் ரென்ஞ்சினி (courtesy sunnywayn)

Highlights

  • சன்னி வையன் ரென்ஞ்சினி என்ற நடனக் கலைஞரை மணம்முடித்துள்ளார்
  • சன்னி வையன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
  • திருமணம் கேரளா குருவாயூர் கோவிலில் நடைபெற்றது
New Delhi :

மலையாள நடிகர் சன்னி வயைன் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த டான்ஸர் ரென்ஞ்சினி குனஞ்சுவைத் திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. இந்த தகவலை சன்னி வையன் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இப்போதுதான் திருமணம் முடிந்தது' என்று கேப்ஷனுடன் திருமணப் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.  ரென்ஞ்சினி குன்ஞ்சு ‘விஸ்டம் ஆஃப் ஆர்ட் டான்ஸ்' என்ற நடனப் பள்ளியின் நிறுவனர் ஆவார். 

திருமணத்தில் மணப்பெண் கேரளாவின் பாரம்பரிய உடையான வெள்ளை நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்த சேலையை அணிந்திருந்தார். சன்னி வையன் வேட்டி மற்றும் தோளில் துண்டுடன் இருந்தார். இருவரும் துளசி மாலையை அணிந்து சிரித்தபடி புகைப்படத்தில் உள்ளனர்

சன்னிவையன் பதிவிட்ட இண்ஸ்டாகிராம் பதிவு இதோ…

Advertisement

திருமண வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணம் வருகிறது. சன்னி வையன் உடன் நடித்த நடிகர்களான, துல்கர் சல்மான், நிவின் பாலி, இந்திரஜித் சுகுமாறன், மற்றும் பலர் வாழ்த்துக் கூறியுள்ளனர். துல்கர் சல்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ வாழ்த்துகள் காதல் பறவைகளே! இந்த புகைபடம் காதலுக்கானது” என்று தெரிவித்திருந்தார். நடிகர் நிவின் பாலி “சன்னி மற்றும் ரென்ஞ்சினிக்கு திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தார்.

Advertisement

துல்கர் சல்மான் பதிவிட்ட கமெண்ட்டின் ஸ்கீரின் ஷாட்

சன்னி வையனின் திருமணப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். திருமணத்தில் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமண வரவேற்பு கொச்சினில் நடக்கும் எனத் தெரிகிறது

Advertisement

Advertisement

சன்னி வையன் காயம்குலம் கொச்சுன்னி, நீலாகசம் பச்சக்கடல் சுவன்னா பூமி, செகண்ட் ஷோ, அன்னமரியா கலிப்பிலான்னு, போக்கிரி சைமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

Advertisement