நடிகை பார்வதி கேரளா மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்
Kozhikode: சமூக ஊடகங்களில் தன்னை துன்புறுத்திய நபர் மீது மலையாள நடிகை பார்வதி திருவோத்து காவல் துறையில் புகார் அளித்தார். அந்த நபர் கடந்த ஒரு மாதமாக தனது குடும்பத்தினரை பின்தொடர்ந்ததாகவும் பார்வதி தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரி “இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார் மேலதிக விவரங்கள் எதையும் வழங்கவில்லை.
இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354டி (பின் தொடர்தல்) கேரள காவல்துறை சட்டத்தின் கீழ் 120 ஓ ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. நடிகை பார்வதி கேரளா மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். டேக் ஆஃப், உயரே, பெங்களூர் டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி ஆகிய பல படங்கள் நடிகை பார்வதிக்கு வெற்றியைத் தேடி தந்தது.