குழந்தையை காப்பாற்றிய மாலி நாட்டின் இமிகிரேண்ட்டை பாரிஸ் மேயர் ஆன் ஹிடல்கோ பாராட்டியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- 4வது மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய மாலியன் இமிகிரண்ட
- பாரிசின் மேயர் பிரான்சில் குடியேற தனது முயற்சி ஆதரிக்கப்படும் என்றார்.
- கஸாமா, ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனை சந்திக்க அழைக்கப்பட்டார்.
Paris: பாரிஸில் நான்கு மாடி குடியிருப்பில் இருந்து தொங்கி கொண்டிருந்த குழந்தையை சபைடர் மேன் போல் ஏறி காப்பாற்றிய மாலி நாட்டின் இமிகிரேண்ட்டை பாரிஸ் மேயர் ஆன் ஹிடல்கோ பாராட்டியுள்ளார்.
22 வயதான மாமோடோ கசமா படிக்கட்டு ஏறுவது போல் வேகமாக ஒரு மடியில் இருந்து மற்றொரு மாடி தாவி குழந்தையை காப்பற்றி மக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து மாமோடோ திங்கள் அன்று ஜனாதிபதி எமானுவல் மக்ரோனை சந்திக்க எலிசே ஜனாதிபதி அரண்மனைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மேயர் அறிவித்தார்
"மாமோடோவின் வீர செயலுக்கு எனது பாராட்டுகள்" என ஹிடல்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தொலைபேசியிலும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
ஹிடால்கோ உடன் பேசிய மாமோடோ சில மாதங்களுக்கு முன் ஃபிரான்ஸ் வந்ததாகவும் இனி இங்கு இருப்பதே விருப்பம் என தெரிவித்துள்ளார்.
"இவரது தைரியம் பாராட்டுக்குரியது, இச்செயல் அனைத்து குடிமக்களுக்கும் ஓர் உதாரணம். அதனால் அவர் இங்கு இருக்க முடிவு செய்தால் ஃபிரான்ஸ் அரசு ஆதரவு அளிக்கும்" என ஹிடல்கோ தெரிவித்துள்ளார்.
ஃபிரான்ஸ் அமைச்சரும் அவரது உயிரை பொருட்படுத்தால் காப்பாற்ற முன் வந்தது பாராட்டுக்குரியது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
© Thomson Reuters 2018
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)