This Article is From Oct 11, 2019

India-China Informal Summit: அக். 11-12 தவிர்க்க வேண்டிய Traffic உள்ள சாலைகள்

India China Informal Summit: சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping), இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் (PM Narendra Modi) மாமல்லபுரத்தில் (Mahabalipuram) இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில்  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல இடங்களில் போக்குவரத்துகளை திசை திருப்பியுள்ளனர்.

India-China Informal Summit: அக். 11-12 தவிர்க்க வேண்டிய Traffic உள்ள சாலைகள்

India China Summit: காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை கனரக வர்த்தக வாகனங்கள், இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் டேங்கர்கள் சாலைகளில் அனுமதிக்கப்படாது

New Delhi:

சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping), இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் (PM Narendra Modi) மாமல்லபுரத்தில் (Mahabalipuram) இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில்  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல இடங்களில் போக்குவரத்துகளை திசை திருப்பியுள்ளனர். அக்டோபர் 11 மற்றும் அக்டோபர் 12 இரண்டு நாட்கள் மாநாடு நடைபெறுவதால் பள்ளிகள் , கல்லூரிகள் வணிக நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்  அதன்படி திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.  ஜிஎஸ்டி சாலை விமானநிலையத்திலிருந்து கத்தி பாரா,அண்ணாசாலை (கத்தி பாரா முதல் சின்னமலை)சர்தார்  வல்லபாய் படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை -ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை கனரக வர்த்தக வாகனங்கள், இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் டேங்கர்கள் சாலைகளில் அனுமதிக்கப்படாது என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.  

சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் செய்யப்பட்ட சாலை போக்குவரத்து மாற்றங்கள் இங்கே: 

பெருங்குளத்தூரிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் அனுமதிக்கப்படாது. அவை மதுரவாயில்  வெளியே உள்ள ரிக் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.

தெற்கு சென்னையிலிருந்து நகரின் வடக்குப் பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்று குரோம்பேட்டை -தாம்பரம் நெடுஞ்சாலை வழியாக மதுரவாயில் வெளி ரிங்க் ரோடை அடையலாம். தாம்பரம் மற்றூம் குரோம்பேட்டை அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம். 

ஜிஎஸ்டி சாலையில் எந்தவொரு வாகனங்களும் கிண்டியை நோக்கி அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக அக்டோபர் 11 மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 100 அடி சாலை நோக்கி திருப்பி விடப்படும்.

நகரத்திலிருந்து ஓ.எம்.ஆரில் உள்ள அனைத்து வாகனங்களும் அக்டோபர் 11 ம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை சோலிங்கநல்லூர் சந்திப்பில் உள்ள பெரும்பக்கத்தில் திருப்பி விடப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வாகனங்கள் அக்கரை சந்திப்பில் இருந்து முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது.

ஓ.எம்.ஆரில் உள்ள அனைத்து வாகனங்களும் அக்டோபர் 12 ஆம் தேதி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சோலிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி திருப்பி விடப்படும்.

.