பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையிலான முதல் சந்திப்பு கடந்த ஏப்ரலில் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது.
Chennai/ New Delhi: சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றுள்ளன. கோவளம் தாஜ் ஓட்டலுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், கிண்டி சோழா ஓட்டலுக்கு சீன அதிபர் ஜிங்பிங்கும் ஓய்வெடுப்பதற்காக புறப்பட்டுச் சென்றனர்.
சீன அதிபர் ஜி ஜிங்பிங் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை,கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
விமான நிலைய வரவேற்பை முடித்துக் கொண்ட பின்னர் சீன அதிபர் கிண்டியில் உள்ள சோழா ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்ட ஜிங்பிங், அங்கிருந்து நேராக மாமல்லபுரத்திற்கு கிளம்பினார்.
இதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரத்திற்கு வந்து, சீன அதிபரை வரவேற்க தயாராக இருந்தார். மாமல்லபுரத்தை சீன அதிபர் ஜிங்பிங் சாலை மார்க்கமாக சென்றடைந்தார். அங்கு அவரை தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டை அணிந்தவாறு பிரதமர் மோடி வரவேற்றார்.
வழக்கமாக குர்தா உடைந்திருக்கும் பிரதமர் மோடி இன்று முதன்முறையாக தமிழர் பாரம்பரியத்தில் வேட்டி சட்டையுடன் காட்சி அளித்தார். இது மிகவும் வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் அமைந்தது. வரவேற்ற பின்னர், ஜிங்பிங்கை மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் மோடி சுற்றிக் காண்பித்தார்.
அர்ஜூனன் தபசு, ஐந்து ரத கோயில் உள்ளிட்ட இடங்களில் இரு தலைவர்களும் கூட்டாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு இடத்தையும் பிரதமர் மோடி விளக்க, அதனை மிகுந்த கவனத்துடன் சீன அதிபர் கேட்டுக்கொண்டார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்ட இரு தலைவர்கள் இளநீரை அருந்தினர். இதன்பின்னர், கடற்கரை கோயிலுக்கு சீன அதிபரை அழைத்துச் சென்ற மோடி, அவரிடம் கோயில் மற்றும் சிற்பங்களின் வரலாற்றை எடுத்துரைத்தார். இதனை முடித்தபின்னர், இருவரும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
இதன்பின்னர் இரவு உணவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இருவரும் சுமார் 2 மணிநேரமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்கள். முன்னதாக நடைபெற்ற இரவு உணவின்போது சுமார் 28 வகையான பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இதன்பின்னர், ஓய்வெடுப்பதற்காக சீன அதிபர் ஜிங்பிங் கிண்டி சோழா ஓட்டலுக்கும், பிரதமர் மோடி கோவளம் தாஜ் ஓட்டலுக்கும் புறப்பட்டுச் சென்றனர்.
கலை நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் அரங்கேற்றப்பட்டது. அவ்வப்போது ராமாயண காவியம் குறித்து ஜிங்பிங்கிற்கு மோடி விளக்கம் அளித்தார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சி.
மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் சீன அதிபர் ஜிங்பிங்...
மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் சீன அதிபர் ஜிங்பிங்...
கோயில் சிற்பங்களை விளக்கும் பிரதமர் மோடி.
மோடியுடன் குடைவரை கோயில்களை பார்வையிடும் சீன அதிபர் ஜிங்பிங்.
மோடியுடன் சீன அதிபர் ஜிங்பிங் இளநீர் அருந்தும் புகைப்படங்கள்...
மோடியுடன் சீன அதிபர் ஜிங்பிங் இளநீர் அருந்தும் புகைப்படங்கள்...
சீன அதிபர் ஜிங்பிங்கை வரவேற்கும் பிரதமர் மோடி #Video
சுவாரசியமாக உரையாடும் சீன அதிபர் - பிரதமர் மோடி
வேஷ்டி சட்டை அணிந்து சீன அதிபரை வரவேற்கும் பிரதமர் மோடி.
சீன அதிபரை வேஷ்டி சட்டையணிந்து வரவேற்கும் மோடி.
வேட்டி, சட்டை, தோளில் துண்டுடன் பிரதமர் மோடி
ஐ.டி.சி. சோழா ஓட்டலுக்கு வந்த சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடியும் - ஜி ஜிங்பிங்கும் மொத்தம் 6 மணி நேரம் சந்தித்து பேசுகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், மேள, தாளங்கள் முழங்க சீன அதிபர் ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலாசாரம் நிறைந்த தமிழகத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலையில் பிரமாண்டமான நுழைவாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் மற்றும் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களில் வாழை மரம் மற்றும் தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.