New Delhi: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எந்த சூழ்நிலையிலும் செயல்படுத்த மேற்கு வங்கம் அனுமதிக்காது என்றும் சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்ட நிகழ்வுகளையும் அறிவித்துள்ளார்.
“நாங்கள் ஒருபோதும் வங்காளத்தில் குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம். திருத்தப்பட்ட சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் நாங்கள் அதை செயல்படுத்த மாட்டோம்” என்று மம்தா பானர்ஜி கூறினார். பாஜக அல்லாத மாநிலங்களில் சட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“குடியுரிமை சட்டம் இந்தியாவை பிரிக்கும். நாங்கள் ஆட்சியிலிருக்கும் வரை மாநிலத்தில் ஒரு நபர் கூட நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அஸ்ஸாமிற்கு வருகை தரும் பயணத்தைப் பற்றி குறிப்பிடுகையில், வடகிழக்கு முழுவதும் குடியுரிமை சட்டம் மீதான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த திட்டம் கைவிடப்பட்டால் அது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.