This Article is From Apr 01, 2019

‘இது முக்கிய தேர்தல், நம் ஓட்டு மிக முக்கியமானது!’- ஆந்திராவில் மம்தா பிரசாரம்

ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து கொடுக்காததை எதிர்த்து சென்ற ஆண்டு சந்திரபாபு நாயுடு, பாஜக-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.

‘இது முக்கிய தேர்தல், நம் ஓட்டு மிக முக்கியமானது!’- ஆந்திராவில் மம்தா பிரசாரம்

அரவிந்த் கெஜ்ரிவால், ‘சுதந்திர இந்தியாவில் மிகவும் ஊழல் மிகுந்த ஆட்சியை நடத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி’ என்றார்

ஹைலைட்ஸ்

  • கெஜ்ரிவால், மம்தா பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
  • மோடி விவாதத்துக்குத் தயாரா, மம்தா சவால்
  • நாங்கள் வெற்றி பெற்றவுடன்,பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்,மம்தா
Vishakhapatnam:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர் பிரசாரத்தின் போது கேட்டுக் கொண்டார். பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மம்தா, பிரதமர் நரேந்திர மோடி மீது சரமாரி விமர்சனங்களை முன் வைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவாலும், பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

ஆந்திராவில் இந்த முறை 25 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலுடன், 175 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளன. மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் பலப்பரீட்சை செய்ய உள்ளன. ஒரு புறம் காங்கிரஸும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளது. 

தெலுங்கு தேசம் பிரசாரக் கூட்டத்தில் மம்தா, ‘இது ஒரு முக்கியமான தேர்தல். நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. நாங்கள் மோடியை வெற்றி பெற விடவே மாட்டோம். இந்த முறை மக்களின் அரசு மத்தியில் அமையும். நாங்கள் வெற்றி பெற்றவுடன் யார் பிரதமராக இருப்பார் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம். பிரதமர் பதவி நிரப்பப்படும்' என்று பேசினார். 

அவர் தொடர்ந்து, ‘பிரதமர் மோடி, என்னுடன் விவாதத்தில் ஈடுபடத் தயாரா. மேற்கு நாடுகளில் இதைப் போன்ற விவாதங்கள் நடைபெறுகின்றன. நம் நாட்டிலும் அப்படி நடைபெற வேண்டும்' என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘சுதந்திர இந்தியாவில் மிகவும் ஊழல் மிகுந்த ஆட்சியை நடத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி' என்றார். 

இந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் விசாகப்பட்டிணத்தில் நடந்தது. 2014 ஆம் ஆண்டு, பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்த தெலுங்கு தேசம், நேற்று பிரசாரம் நடத்திய இடத்திலேயே தான் பொதுக் கூட்டம் நடத்தியது. 

ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து கொடுக்காததை எதிர்த்து சென்ற ஆண்டு சந்திரபாபு நாயுடு, பாஜக-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். அப்போதிலிருந்து அவர் பிரதமர் மோடி மீது மிகவும் கறாரான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். 

.