This Article is From Jan 06, 2019

பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜி தான்: பாஜக தலைவர் பேச்சு

மேற்குவங்கம் மாநிலத்தில் திரிணமுலுக்கு எதிராக பாஜக மோதல்களில் ஈடுபட்டு வந்தநிலையில், மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷின் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மம்தா பானர்ஜியின் வெற்றியை பொறுத்தே பெங்காலின் தலையெழுத்து உள்ளது என திலிப் கோஷ் கூறியுள்ளார்.

Kolkata:

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, முதல் பெங்காலி பிரதமர் ஆக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார்.

மேற்குவங்கம் மாநிலத்தில் திரிணமுலுக்கு எதிராக பாஜக மோதல்களில் ஈடுபட்டு வந்தநிலையில், மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷின் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திலிப் கோஷ், மம்தா பானர்ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அப்படியென்றால்தான் அவரால் சிறப்பாக பணியாற்ற முடியும். பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜி தான் என பிறந்த நாள் வாழ்த்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மம்தா ஆரோக்யமாக வாழவும், அவரது வெற்றிக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். ஏனெனில் அவரது வெற்றியில் தான் பெங்காலின் தலையெழுத்து உள்ளது என்றார்.

தொடர்ந்து அவரிடம் மேற்குவங்க பாஜகவை சார்ந்தவர்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால்? என கேள்வி எழுப்பியதற்கு அவர், இப்போது போட்டியில் முதன்மையாக இருப்பது மம்தா பானர்ஜிதான். அவருக்கு பின் நிச்சயம் பெங்காலில் இருந்து ஒருவர் பிரதமராக வாய்ப்பு உள்ளது. ஆனால், முதல் வாய்ப்பு மம்தாவுக்கு தான். ஜோதி பாசுவை எங்களால் முதல் பிரதமராக ஆக்க முடியவில்லை, அவரை அவரது கட்சி அனுமதிக்கவில்லை என்றார்.

மேலும், முதல் பெங்காலி குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்தார். அதேபோல், தற்போது முதல் பெங்காலி பிரதமருக்கான வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 

.