சிபிஐ அமைப்பு நிர்வாகத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மம்தா கருத்து கூறியுள்ளார்.
Kolkata: சிபிஐ அமைப்புக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரச் சண்டை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அதன் இயக்குனர் அலோக் வர் மா மற்றும் இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்காலிக சிபிஐ இயக்குனராக ராகேஸ்வர ராவை பிரதமர் மோடி தலைமையிலான கமிட்டி அமைத்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, பாஜகவின் புலனாய்வு அமைப்பாக மாறிவிட்டது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் கூறியுள்ளார்.
இதேபோன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் சிபிஐ அதிகாரச் சண்டை விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மவுனத்தை தவிர்த்து விட்டு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவோ அல்லது மத்திய அரசின் தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.