This Article is From Jun 17, 2018

நான்கு மாநில முதலமைச்சர்கள் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு

டில்லி முதலமைச்சர் திரு.அர்விந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் பல ஆதரவு தெரிவித்துள்ளனர்

ஹைலைட்ஸ்

  • முதலமைச்சர் கேஜ்ரிவால் டில்லி கவர்னர் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்
  • முதலமைச்சர் கேஜ்ரிவால் டில்லி கவர்னர் மாளிகையில் போராடிவருகின்றனர்
  • “அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி” என மம்தா பானர்ஜி கூறினார்.
New Delhi: புதுடில்லி : தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்க சென்ற பாஜக ஆட்சி இல்லாத நான்கு மாநிலத்தின் முதலமைச்சர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தால் ஆட்சி பாதிக்கப்படுவதை கண்டித்து, கடந்த ஆறு தினங்களாக மூன்று அமைச்சர்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பான்ர்ஜி, ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சார் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கேரள மாநில முதலமைச்சர் பின்ராயி விஜயன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நடைப்பெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக சனிக்கிழமையன்று டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க அனுமதி தருமாறு கவர்னர் அனில் பைஜாலுக்கு நான்கு மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினர்.

“மாநில முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுப்பதில் ஜனநாயகம் இல்லை. நாட்டின் தலைநகரான டில்லியில் இந்த நிலைமை என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமை என்ன ஆகும்? இது அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி. இந்த பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம்” என்றார் மம்தா பானர்ஜி.

“நாங்கள் தெரு பிச்சைக்காரர்கள் அல்ல. எங்களுக்கு சுய மரியாதை உண்டு” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

டில்லியில் நடைப்பெறும் பிரச்சனைகளுக்கு மத்திய அரசை குற்றம் சாட்டினார் கேரள மாநில முதலமைச்சர் பின்ராயி விஜயன் கூறினார். “மத்திய அரசின் அனுகுமுறையாலே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கட்டுப்படுத்துவது நாட்டுக்கு ஆபத்தானது. நாங்கள் ஆதரவாக இருப்போம் (அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு)” என்றார்.

அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை ஐஏஎஸ் அமைப்பு மறுத்தாலும், அமைச்சர்களிடம் இருந்து அழைப்புகளை ஏற்கவோ, சந்திக்கவோ அதிகாரிகள் மறுக்கின்றனர் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டுகிறார்.

“நான்கு மாதங்களாக இந்த பிரச்சனை தீர்க்கப்படவில்லை. ஆறு தினங்களாக தர்ணாவில் இருக்கும் முதலமைச்சரை சந்திக்க ஆறு நிமிடங்கள் கூட கவர்னருக்கு கிடைக்கவில்லையா?” என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

பாஜக கட்சி கூட்டனியில் இருந்து விலகிய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நல்லாட்சி பெற மத்திய மாநில அரசுகள் கூட்டாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

“ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கடந்த மாதம் கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற திரு. எச்டி குமாரசாமி, “டில்லி முதலமைச்சருக்கான எங்களது ஆதரவை அளிக்கவும், ஜனநாயகம் காக்கவும் இங்கு வந்துள்ளோம்” என்றார்.

நான்கு மாநில முதலமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்த திரு.அர்விந்த் கேஜ்ரிவால், “ஜனநாயகத்தை காக்க நாங்கள் ஒன்றாக பணியாற்றுவோம்” என்றார்.

இதனிடையில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் திரு.அர்விந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்தை நாடகம் என விமர்சித்துள்ளனர். எனினும், டில்லி முதலமைச்சரின் போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் பல ஆதரவு தெரிவித்துள்ளனர், மாநில அரசின் செயல்பாட்டில் மத்திய அரசின் தலையிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை குறித்து மம்தா பானர்ஜியிடம் கேட்கையில், “டில்லியில் தனக்கான இருப்பிடத்தை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் வருவதை விரும்பாதது அவர்களின் உள்மாநில பிரச்சனை” என தெரிவித்தார்.
.