This Article is From Feb 11, 2020

'நாட்டின் பொருளாதார நலனுக்காக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து மோடி பணியாற்ற வேண்டும்' : மம்தா

தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

'நாட்டின் பொருளாதார நலனுக்காக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து மோடி பணியாற்ற வேண்டும்' : மம்தா

நாட்டின் பொருளாதார நலனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் மம்தா.

Kolkata:

நாட்டின் பொருளாதார நலனுக்காக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் பழிவாங்குதலை மத்திய அரசு கைவிட்டு விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேற்கு வங்கத்தில் பட்ஜெட்டுக்கு பிந்தைய பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மம்தா பானர்ஜி நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்கம் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில் முழுமையான மாநில அரசின் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கருத்துக்களை சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, மத்திய அரசு வெறுப்பு அரசியலை கைவிட்டு விட்டு பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

'ரிசர்வ் வங்கி சொன்னது மிகவும் முக்கியமான விஷயம். மத்திய அரசு வெறுப்பு அரசியலில் தீவிரம் காட்டுவதை தவிர்த்து விட்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து தரப்பினரிடமும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் எதிர்க்கட்சியினரையும் மோடி அழைத்துப் பேச வேண்டும்' என்று மம்தா கூறியுள்ளார். 

மத்திய அரசு முக்கிய முடிவுகள் ஏதும் எடுப்பதற்கு முன்பாக மாநிலங்களை கலந்தாலோசிப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்க அரசின் பட்ஜெட் மக்கள் நலனை மனதில் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்று கூறினார். 

.