This Article is From Aug 08, 2018

மம்தா பானர்ஜி, ரஜினி ஆகியோர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்

Advertisement
இந்தியா Posted by

சென்னை: (பிடிஐ): மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

உடல் நல பாதிப்பால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த கருணாநிதி, உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவால் இன்று மாலை இயற்கை எய்தினார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தேசிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவு சென்னை வந்தடைந்த மம்தா பானர்ஜி, கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். “சிறந்த குடிமகனை இந்தியா இன்று இழந்துவிட்டது. தமிழக மக்கள், அவர்களது தந்தையை இழந்துள்ளனர். கருணாநிதியின் குடும்பத்தாருக்கும், தமிழக மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், வி.சி.கே கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியப் பொதுவுடைமை கட்சி மாநில செயலாளர் முத்துராசன் ஆகியோர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement