This Article is From Jul 31, 2018

‘இது பிரித்து ஆளும் யுக்தி!’- அசாம் நடவடிக்கை குறித்து அரசைத் தாக்கும் மம்தா

யாரையும் இறுதி வரைவின் அடிப்படையில் வெளியேற்ற மாட்டோம் என்று அரசு தரப்பு கூறியுள்ளது

ஹைலைட்ஸ்

  • இந்த பிரித்து ஆளும் யுக்தி கண்டிக்கப்பத்தக்கது, மம்தா
  • இது குறித்து மேற்கு வங்கத்திடம் கலந்தோலிசிக்கப்படவில்லை, மம்தா
  • 40 லட்சம் பேர் இறுதி வரைவில் இடம் பெறவில்லை
Kolkata:

அசாம் மாநிலத்தில் இன்று இறுதி குடியுரிமை இறுதி வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. அவர்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவர் என்று தெரிகிறது. அசாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகறிது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

2sd2seag

மம்தா, ‘அசாமில் வெளியிட்டுள்ள வரைவில், பலர் வெளிநாட்டினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் வெளியேற்றப்படுவரா? அரசு நீக்கியுள்ளதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். அவர்களுக்கு இனி வரப்போகும் கஷ்டங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இது பிரித்து ஆளும் யுக்தியாகும். மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இது மனிதத்தன்மையை அழித்துவிடும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசுவேன். அவரிடம், மக்களைக் காப்பாற்றுங்கள், அவர்களை பிரிக்காதீர்கள் என்று கூறுவேன். இவ்வளவு பெரிய ஒரு முடிவை அரசு எடுக்கிறது. இது குறித்து எங்கள் மாநிலத்திடம் கலந்தோலிச்சித்து இருக்கக் கூடாதா?’ என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தப் பிரச்னை குறித்து திரிசணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ், சிபிஎம், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை நாடாளுமன்றத்தில் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். ‘மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை போன்றவை அரசின் இந்த நடவடிக்கைகளால் நசுக்கப்படுகின்றது’ என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
 

vfm1k548

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இப்போது வெளியிடப்பட்டுள்ளது வெறும் இறுதி வரைவுதான். இது இறுதிப் பட்டியல் இல்லை. எனவே, மக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். சிலர் சரியான ஆவணங்களை சமர்பிக்காததால் அவர்களின் பெயர் விடுபட்டுப் போயிருக்கும். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். இதை வேண்டுமென்றே சிலர் பிரச்னையாக்கி வருகின்றனர்’ என்று உறுதி அளித்துள்ளார். 

‘தேசிய குடிமக்கள் பதிவுக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 6.5 கோடி மக்கள் விண்ணப்பத்திருந்தனர். 68.27 குடும்பங்கள் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்திருந்தனர்’ என்று இந்திய ஜெனரல் பதிவாளர் சைலேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

‘முதல் வரைவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வெளயிடப்பட்டது. அப்போது அமைதியான சூழல் நிலவியது. இறுதிப் பட்டியலின் போதும் அதைப் போன்ற சூழலை காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று கோரிக்கை வைத்துள்ளார் மாநில முதல்வர் சர்பானந்த் சோனாவால்.

குடியுரிமை கொடுக்கப்படாத 40 லட்சம் பேர், சரியான ஆவணங்களை சமர்பித்தால் வரைவில் சேர்க்கப்படுவர் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

வங்க தேச அகதிகளையும், முஸ்லீம் சமூகத்தினரையும் குறிவைக்கும் நோக்கில் தான் இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

யாரையும் இறுதி வரைவின் அடிப்படையில் வெளியேற்ற மாட்டோம் என்று அரசு தரப்பு கூறியுள்ளது.

.