This Article is From Jan 27, 2020

'கருத்து வேறுபாடுகளை ஓரமாக வைக்க வேண்டிய நேரம் இது' - எதிர்கட்சிகளுக்கு மம்தா அறிவுரை!!

குடியுரிமை சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் இருந்து வருகிறது. அவரது முயற்சிகளை தேசிய அளவில் ஆதரித்தாலும் மாநில அளவில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மம்தாவை மாநில அளவில் விமர்சிக்கின்றன.

'கருத்து வேறுபாடுகளை ஓரமாக வைக்க வேண்டிய நேரம் இது' - எதிர்கட்சிகளுக்கு மம்தா அறிவுரை!!

தனது முயற்சிகளுக்கு காங்கிரசும், இடதுசாரிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள மம்தா, தனித்து போராட்டம் நடத்தவும் தான் தயார் என்று அறிவித்துள்ளார்.

Kolkata:

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் மேற்கு வங்க சட்டமன்றத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் கருத்து வேறுபாடுகளை ஓரங்கட்டி விட்டு ஒன்றிணைந்து குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என்று மாநில எதிர்க்கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். 

சட்டமன்றத்தில் பேசிய மம்தா, 'கருத்து வேறுபாடுகளை ஓரமாக வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இப்போது ஒன்றிணைந்து நாட்டைக் காக்க போராட வேண்டும்' என்று கூறினார். 

இதற்கு இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டார்கள். மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, மக்கள் தொகை கணக்கீட்டுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றி முடிக்கப்பட்டது. 

இரு கட்சிகளும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தனது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மம்தா கோரிக்கை வைத்தார். அப்படி அவர்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டாலும் தான் தனது சொந்த வழியில் போராட்டம் நடத்துவேன் என்று அவர் கூறினார். 

குடியுரிமை சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் இருந்து வருகிறது.

 அவரது முயற்சிகளை தேசிய அளவில் ஆதரித்தாலும் மாநில அளவில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மம்தாவை மாநில அளவில் விமர்சிக்கின்றன.

இதற்கிடையே இன்று மேற்கு வங்க சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றி முடிக்கப்பட்டது. முன்னதாக கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதுதொடர்பாக மேற்கு வங்க சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது. தாமதமாக மாநில அரசு தீர்மானத்தை நிறைவேற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம் அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று தெரிவித்தார். 

.