This Article is From Dec 19, 2019

ஐ.நா கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்த தைரியம் உள்ளதா பாஜகவுக்கு? மம்தா பளார்!

பாஜகவுக்கு தைரியம் இருந்தால், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்து ஐ.நா கண்காணிப்பில் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும். அதில், பாஜக பெரும்பான்மையை இழந்தால், ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்றார்

ஐ.நா கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்த தைரியம் உள்ளதா பாஜகவுக்கு? மம்தா பளார்!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Kolkata:

குடியுரிமை சட்டத்திருத்தம் தேவையா என்பது குறித்து மக்கள் கருத்தை அறிய ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பில் இந்தியாவில் வாக்கெடுப்பு நடத்த பாஜகவுக்கு தைரியம் உள்ளதா? என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும், தீவிர போராட்டம் வலுத்துள்ள நிலையில், கொல்கத்தாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, பாஜகவுக்கு தைரியம் இருந்தால், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்து ஐ.நா கண்காணிப்பில் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும். அதில், பாஜக பெரும்பான்மையை இழந்தால், ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்றார். 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து பேசிய அவர், உங்களிடம் பெரும்பான்மை இருப்பதால், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? நீங்கள் சமூகத்தின் தூண்கள் உட்பட அனைவரையும் பயமுறுத்துகிறீர்கள் என்று அவர் கூறினார்.. 

இதனிடையே, மம்தாவின் கருத்திற்கு பாஜக உடனடி பதிலடி அளித்துள்ளது. இதுகுறித்து பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மால்வியா தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மம்தா மிகவும் பொறுப்பற்ற முதல்வர் ஆவார். ஒரு மக்கள் பதவியை வகிக்க தகுதியற்றவர். இது போன்று வகையில் பாகிஸ்தானே பேசும். 

இந்த சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டமானது,  2014ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிப்பதாக உறுதியளிக்கிறது. 

மதத்தை குடியுரிமைக்கான அளவுகோலாக மாற்றுவதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பின் அடித்தளங்களுக்கு இந்த சட்டம் சவாலாக உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமைதியான முறையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்த சில நகரங்களில் கொல்கத்தாவும் ஒன்றாகும் - போராட்டக்காரர்கள் காவல்துறையை மீறியதால் மற்ற பகுதிகளில் வன்முறையால் போராட்டங்கள் சிதைக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் கூட்டங்ள் கூடுவதை தடைசெய்யும் வகையில் 144 சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

லக்னோ மற்றும் அகமதாபாத்தில், போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். மங்களூருவில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

எதிர்க்கட்சிகள் வன்முறையைத் தூண்டுவதாக பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், மம்தா பானர்ஜி ஒரு மாற்றுக் கோட்பாட்டை முன்வைத்துள்ளார். பாஜக தனது கட்சிக்காரர்களுக்காக சில தலைக்கவசங்களை வாங்கியுள்ளது. அதனை அணிந்து அவர்கள் "ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கெடுக்கும் வகையில் அவர்களின் சொத்துக்களை அழிப்பார்கள்" என்று அவர் கூறினார்.

.