This Article is From Jun 27, 2019

மம்தாவின் தோல்வியே மேற்குவங்கத்தில் பாஜக வளர்வதற்கு காரணம்: காங்கிரஸ் தாக்கு

மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஒருதனிப்பட்ட அரசின் மூலம் ஆட்சிசெய்ய நினைக்கிறது. மாநிலத்தில் பாஜகவிற்கு எதிராக காங்கிரசும், இடதுசாரிகளும், திரிணாமுல் காங்கிரசுடன் கைக்கோர்க்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

மம்தாவின் தோல்வியே மேற்குவங்கத்தில் பாஜக வளர்வதற்கு காரணம்: காங்கிரஸ் தாக்கு

பாஜகவிற்கு எதிராக காங்,, இடதுசாரிகள் கைக்கோர்க்க மம்தா அழைப்பு.

New Delhi:

மம்தாவின் தோல்வியே மேற்குவங்கத்தில் பாஜக வளர்வதற்கு காரணம் என்றும், பாஜகவிற்கு எதிரான மம்தாவின் அழைப்பு குறித்தும் காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஒருதனிப்பட்ட அரசின் மூலம் ஆட்சிசெய்ய நினைக்கிறது. மாநிலத்தில் பாஜகவிற்கு எதிராக காங்கிரசும், இடதுசாரிகளும், திரிணாமுல் காங்கிரசுடன் கைக்கோர்க்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, மக்கள் ஏதாவது சொல்வார்கள், பின்னர் அவர்களின் வார்த்தையிலிருந்து விலகுவார்கள், அதுதான் மம்தாவின் இயல்பு. அப்படி மம்தா பானர்ஜி இணைந்து செயல்பட வேண்டும் என தீவிரமாக இருந்தால் எங்களுடைய மூத்த தலைமையுடன் பேச வேண்டும். மம்தா பானர்ஜியின் தோல்வி காரணமாக மேற்கு வங்காளத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் 2019 தேர்தலில் பா.ஜனதா 17 தொகுதிகளை வென்றது. 22 தொகுதிகளை குறிவைத்து பணியாற்றிய பாஜகவிற்கு கைமேல் பலனாக 18 தொகுதிகள் கிடைத்தது.

தேர்தலுக்கு முன்னதாக எந்த ஒரு கட்சியையும் கூட்டணியில் சேர்க்க மம்தா பானர்ஜி தயாராக இல்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்த போதும், அதனை புறக்கணித்தார். 42 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 22 தொகுதிகளில் வென்றது.

2014 தேர்தலுடன் ஒப்பிட்டால் 12 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் இழந்தது. காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளில் வென்றது. பாஜகவின் வாக்கு வங்கியும் அதிகரித்தது. தேர்தலுக்கு பின்னரும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக மோதல் பெரும் பிரச்சனையாக அங்கு தொடர்கிறது.

(With inputs from ANI and PTI)

.