Read in English
This Article is From Dec 18, 2019

''உங்கள் வேலை நாட்டில் வன்முறையை தூண்டுவது அல்ல'' - அமித் ஷாவுக்கு மம்தா பானர்ஜி பதிலடி!!

குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் அனுமதியை மத்திய அரசு பெறத் தேவையில்லை என்று பதில் அளித்திருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

குடியுரிமை சட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு எழுந்துள்ள சூழலில், அமித் ஷாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். 'உங்கள் வேலை நாட்டில் வன்முறையை தூண்டுவது அல்ல.' என்று அமித் ஷாவுக்கு மம்தா பதில் கூறியுள்ளார். 

குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் அனுமதியை மத்திய அரசு பெறத் தேவையில்லை என்று பதில் அளித்திருந்தார். 

இந்த நிலையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது-
எக்காரணத்தைக் கொண்டும் குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். இதேபோன்று தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் வங்கதேசத்தில் இடமில்லை. 

Advertisement

குடியுரிமை சட்ட விவகாரத்தில் மத்திய அரசு இப்போது பிறப்பு சான்றிதழை கேட்கத் தொடங்கியுள்ளது. குடியுரிமையை யாரும் இழக்க மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் பான் கார்டு, ஆதார் போன்றவற்றை ஏற்க முடியாது  என்றும் மத்திய அரசு சொல்கிறது. பின்னர் எதுதான் குடியுரிமையை நிரூபிக்க ஆதாரமாக வேண்டும்?. 

அமித் ஷா பாஜக தலைவர் மட்டுமல்ல. இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். அவரது வேலை நாட்டில் வன்முறையை தூண்டி விடுவது அல்ல. நாட்டில் அவர் அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். 

Advertisement

அனைவருக்குமான வளர்ச்சி என்பதில் மத்திய பாஜக அரசு நம்பிக்கை கொண்டிருந்தால், குடியுரிமை சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப்பெற வேண்டும். அவை எப்படி மேற்கு வங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பார்க்கிறேன். 

இவ்வாறு மம்தா பேசினார். 

Advertisement

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. மாநிலத்தில் முர்ஷிதாபாத் ரயில் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனை சுட்டிக் காட்டிய மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கத், ரயில்வே மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போரை சுட்டுத் தள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தையும், ரயில்வே போலீசாரையும் கேட்டுக் கொண்டிருந்தார். 

Advertisement