বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 26, 2019

CAA, CAA, Chhi Chhi: பாட்டாவே பாடிட்டாங்க நம்ம மம்தா திதி

Citizenship Act Protest: “சிஏஏ சிஏஏ சீ…சீ…சீ (சிஏஏ மோசமானது)” என்று தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புது விதமான முழக்கத்தை உருவாக்கினார்.

Kolkata/ New Delhi:

கடந்த வாரம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புது விதமான முழக்கத்தை உருவாக்கினார். அந்த முழக்கம் பேரணியில் கலந்து கொண்ட பலரையும் சிரிக்க வைத்து விட்டது. கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி “இன்றைய எதிர்ப்பு இந்தியாவுக்காக போராடுவதாகும்” என்று தெரிவித்துவிட்டு “சிஏஏ சிஏஏ சீ…சீ…சீ (சிஏஏ மோசமானது)” என்று தெரிவித்தார். 

CAB... NRC... wapas lo (குடியுரிமை சட்டத்தையும் என்.ஆர்.சி சட்டத்தையும் ரத்து செய்) சிஏபி… என்.ஆர்.சி… லச்சா… லச்சா பிஜேபி லச்சா (சிஏபி, என்.ஆர்.சி… அவமானம், அவமானம், பாஜக… அவமானம் அவமானம்)

திங்களன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மம்தா பானர்ஜி போட்ட முழக்கம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. ட்விட்டர் பயனர் ஒருவர் “யாராவது விழுந்து விழுந்து சிரிக்க விரும்பினால் இதை பார்க்கலாம்” என்று குறிப்பிட்டு #CaaCaaChhiChhi என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியிருந்தார். 45 நொடி வீடியோ பகிரப்பட்டது.

Advertisement

கமெண்டுகளில் “இந்த போராட்டத்தில் நான் இருந்தேன். நானும் அவருடன் இணைந்து சீ…சீ…சீ சொன்னேன்” என்று கூறப்பட்டிருந்தது. 

வங்காள முதலமைச்சர் “ஜனநாயகத்தை காப்பாற்ற ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்க” எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 

Advertisement
Advertisement