বাংলায় পড়ুন Read in English
This Article is From May 30, 2019

''மேற்கு வங்கத்தில் மக்களிடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்துகிறது'' - மம்தா குற்றச்சாட்டு!!

மேற்கு வங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் பாஜகவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

பாஜக உத்தரவின்பேரில் போலீஸ் அதிகாரிகள் சிலர் செயல்படுவதாக மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.

Naihati:

மேற்கு வங்கத்தில் வங்காளிகளுக்கும், வங்காளி அல்லாதவர்களுக்கும் இடையே பாஜக பிரிவினை ஏற்படுத்தி வருவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்திற்கு நெருக்கடி கொடுக்கும் பாஜகவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் மம்தா கேட்டுக் கொண்டுள்ளார். 

மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ 22 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை மம்தா பானர்ஜி தவிர்த்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின்னர் நைகாட்டியில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். 

Advertisement

இந்தக் கூட்டத்தில் மம்தா பேசியதாவது-
மத நல்லிணக்க மாநிலமாக மேற்கு வங்கம் இருந்து வருகிறது. இங்கு வங்காளிகள் - வங்காளி அல்லாதவர்களுக்கு இடையே பிரிவினையை பாஜக ஏற்படுத்தி வருகிறது. அதற்கு எதிராக வங்க மக்கள் ஒன்றிணைய வேண்டும். 

400 -க்கும் அதிமான மேற்கு வங்க குடும்பத்தினரை பாஜகவினர் வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். அவர்களை நான் விட மாட்டேன். 
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார். 

Advertisement
Advertisement