This Article is From Dec 31, 2019

ஓடும் ரயிலில் சாகசம் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், கான் என்ற அந்த இளைஞர் ரயில் படிக்கட்டில் தொங்கிய படி பெட்டிக்கு வெளியே எட்டி பார்த்த படி பயணிக்கிறார்.

ஓடும் ரயிலில் சாகசம் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

கதவுகளுக்கு வெளியே தொங்கிய படி பயணித்த போது, தண்டவாளம் அருகே இருந்த கம்பத்தின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். (Representational)

Thane:

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் வேகமாக ஓடும் ரயிலின் படிக்கட்டுகளில் நின்றபடி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்த சம்பவம் மும்பரா மற்றும் திவா ரயில் நிலையங்களின் இடையே நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த தில்ஷாத் நவுஷத் கான் என்ற இளைஞரின் நண்பர் அவர் சாகசத்தில் ஈடுபடுவதை வீடியோ எடுத்து வந்துள்ளார். 

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், கான் என்ற அந்த இளைஞர் ரயில் படிக்கட்டில் தொங்கிய படி பெட்டிக்கு வெளியே எட்டி பார்த்த படி பயணிக்கிறார். அப்போது, கதவுகளுக்கு வெளியே தொங்கிய படி எட்டி பார்த்த போது, தண்டவாளம் அருகே இருந்த கம்பத்தின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். 

ஆம்புலான்ஸ் டிரைவராக பணிபுரியும் கான், கோவாந்தி பகுதியில் இருந்து கல்யான் நோக்கி திரும்பி வந்துள்ளார். 

தொடர்ந்து, கானை அவரது நண்பர் அருகிலிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். எனினும், வரும் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கால்வா பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். 

.