லைட்டரை ஆன் செய்ததும் கார் சட்டென தீ பிடித்ததில் கார் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கி விட்டன.
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை. மாறாக உங்களின் விலையுயர்ந்த காருக்கு சேதத்தை விளைவிக்கும்.
இங்கிலாந்தில் ஒருவர் தன்னுடைய காரில் ஏர் ஃப்ரெஷ்னர் அதிகளவில் பயன்படுத்தியுள்ளார். அதன்பின் காருக்குள் இருந்தபடி புகைபிடிக்க விரும்பியர் லைட்டரை ஆன் செய்ததும் கார் சட்டென தீ பிடித்ததில் கார் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கி விட்டன.
மேற்கு யார்கஷியரில் உள்ள ஹாலிஃபாக்ஸில் உள்ள தெருவில் நிறுத்தியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்தவர்கள் பெரிய இடிச்சத்தம் போன்று கேட்டதாக கூறினார்கள். அருகில் இருந்த கடையின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கியுள்ளன.
நல்வாய்ப்பாக வெடிப்புக்கு பின்னர் காரின் உரிமையாளர் சிறிய காயங்களுடன் தப்பிவிட்டார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினர் தீ ஏற்பட்டதற்கான காரணத்தையும் கண்டறிந்துள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news