சல்மா மற்றும் ஆரிஃப் உசைனுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
Meghnagar: மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவி குண்டாக இருப்பதால் முத்தலாக் கூறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சல்மாவின் மாமியார் மற்றும் கணவர் தான் குண்டாக இருப்பதனால் அடிக்கடி அதை கூறி கேலி செய்து வந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவர்களது கேலிக்குள்ளான சல்மா தனது இரண்டு குழந்தைகளுடன் மேக்நகரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு வந்த சல்மாவின் கணவர் மற்றும் மாமியார் அவரை அடித்துள்ளனர். பின்னர், முத்தலாக் கொடுத்துள்ளார்.
இது குறித்து சல்மா கூறுகையில், கணவர் ஆரிஃப் உசைனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. ஒருமுறை அவர் அந்த பெண்ணுடன் போனில் பேசிக் கொண்டிருந்ததை நான் கண்டுபிடித்து அவரிடம் கேட்டதற்கு, இதில் நீ தலையிடாதே என்று கூறிவிட்டார். இதற்கு ஆரிஃப்-ன் தாயாரும் உடந்தை ஆவார்.
முத்தலாக் கூறிய பின்னர், இரண்டு குழந்தைகளையும் கொண்டு செல்ல முயன்றார். நான் தடுத்த போது, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக ஏ.என்.ஐயிடம் சல்மா கூறியுள்ளார். போலீஸில் சல்மா கொடுத்த புகாரின் பேரில், ஆரிஃப் இந்திய தண்டனை சட்டம் 323 மற்றும் 498ன் கீழ் கைது செய்யப்பட்டதாக, போலீஸ் அதிகாரி குஷால் சிங் ராவத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் முஸ்லீம்களின் முத்தலாக் முறையை தடை செய்தது. முத்தலாக் முறை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கடந்த மாதம் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் முத்தலாக் முறை தண்டனைக் கூறியது என்பதை தெளிவுபடுத்தினார்.