பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் அளித்த புகார் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Puducherry: ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.4 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக நிதி நிறுவன அதிபர் தியாகராஜ் (65) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குற்றவிசாரணை பிரிவு போலீஸ் மகேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, தியாகராஜன் கடந்த வியாழனன்று வேலூரில் கைது செய்யப்பட்டார். முதலீட்டாளர்களுக்கு உயர் வட்டி வகிதம் தருவதாக வாக்குறுதி அளித்த தியாகராஜன், கூறியபடி வட்டியும் தரவில்லை, முதல் தொகையையும் திருப்பி தரவில்லை.
புதுச்சேரியை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், இவரது நிறுவனத்தில், சிறுசேமிப்பு திட்டம், மாத வைப்பு திட்டம், 5 ஆண்டு நிரந்தர வைப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் முதலீடு செய்திருந்தனர்.
இதுகுறித்து வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் புகார் அளித்தார். அதில் நிதி நிறுவனத்தில் ரூ.11.18 லட்சம் முதலீடு செய்ததாகவும், ஆனால், அதிலிருந்த எந்த தொகையையும் திரும்ப பெறவில்லை என்று கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையிலே நிதி நிறுவன அதிபரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.