This Article is From Jul 18, 2018

முதல்வருக்கு எதிராக ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டு… ஒருவர் கைது!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

முதல்வருக்கு எதிராக ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டு… ஒருவர் கைது!
Chennai:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மன்னார்குடியைச் சேர்ந்த சி.சிவக்குமார் என்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரை கேலி செய்யும் விதமாக புகைப்படங்களையும் அவதூறு கருத்துகளையும் பரப்பி வருவதாக சென்னையைச் சேர்ந்த சுரேஷ் குமார் புகார் அளித்துள்ளார்.

இதைப் போன்றே, ஒரு பெண், தன்னை தவறாக சித்தரிக்கும் விதத்தில் புகைப்படத்தில் மாற்றம் செய்து பரப்பினார் சிவக்குமார் என்று சைபர் க்ரைம் பிரிவுக்கு புகார் கொடுத்துள்ளார். இந்த புகார்களின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸ் பிரிவினர் சிவக்குமார் மீது பல பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், ‘சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக பதிவுகள் இடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். யாராவது அப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’

‘மன்னை சிவா’ என்ற பெயரில் சிவக்குமார் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.