ரஷ்யா செயின் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில், இரயில் தண்டாவளத்தில் இருந்த 275 டன் மெட்டல் உலோகங்கள் திருடி செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய செயின் பீட்டர்ஸ்பர்க் காவல் துறையினர், மெட்டல் உலோகங்களை கடத்திய 38 வயது நபரை கைது செய்துள்ளனர்.
ஸ்பானர், இடுக்கி போன்ற ஆயுதங்களை கொண்டு இரயில் தண்டவாளத்தில் உள்ள உலோகங்களை கடத்திச் சென்றுள்ளார். கைது செய்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒரு டன் மெட்டல் உலோகம், 220 அமெரிக்கன் டாலன் மதிப்பு கொண்டது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது போன்று கடத்தல் சம்பவங்கள் அவ்வப்போது ரஷ்யாவில் நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Click for more
trending news