மனி தியாகி கைது செய்த போது தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லி போலீஸாரை மிரட்டியுள்ளார். (Representational)
Noida: ஐஏஎஸ் அதிகாரி என சொல்லி ஏமாற்றி தனது சொந்த வேலைகளை செய்ய சொன்ன போலி ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மனி தியாகி எனும் இளைஞன் தான் இந்தச் செயலை செய்துள்ளார் என்று கவுதம் புத்தா நகர் போலீஸ் தெரிவித்துள்ளார். அவர் வேலைகளை விரைவாக முடிக்க சொல்லி கட்டளையிட்டுள்ளார்.
"எங்களுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டு அவரது அலைபேசியை காசிதாபாத்திலிருந்து ட்ராக் செய்தோம்" என்றனர் போலீஸார்.
நொய்டாவில் பதல்பூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு குழு அந்த நபரை பிடித்தது.
அவரை கைது செய்த போது தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லி போலீஸாரை மிரட்டியுள்ளார். சஹிபாபாத்தை சேர்ந்த இவர், பிஏ முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
அவருடைய உறவினர் ஐஏஎஸ் தான். ஆனால், அவரது பெயரை தான் பெயர் என்று கூறி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
"நான் இந்தப் பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவில்லை. சிலருக்கு உதவி மட்டுமே செய்தேன்" என்று தியாகி கூறினார். இவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் கூறியுள்ளது.