ஈயை கொல்ல பயன்படும் எலெக்ட்ரிக் மட்டை (கோப்புப்படம்)
'நான் ஈ' படத்தில் வருவதைப் போன்று, 'ஈ'யை அடிக்க முயன்று வீட்டைக் கொளுத்திய சம்பவம் பிரான்சில் அரங்கேறியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில், நடிகர் நானி நடிப்பில் வெளியான படம் 'நான் ஈ'. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் வில்லன் நடிகர், ஈயின் தொல்லை தாங்காமல் அதை அடிக்க முயன்று வீட்டையே கொளுத்தி விடுவார். அதே போன்று ஒரு சம்பவம் பிரான்சில் அரங்கேறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள பர்கால் செனாவத் என்ற கிராமத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், கடந்த வெள்ளியன்று இரவு உணவருந்த தயாரானார். அப்போது அவரத வீட்டில் ஈ தொல்லை அதிகம் இருந்துள்ளது.
அவர் வீட்டில் ஈக்களை அடிப்பதற்கு என்றே ஒரு எலெக்ட்ரிக் ரேக்கேட்டை வைத்துள்ளார். அதை வைத்து ஈயை அடித்துக் கொண்டிருந்தார். இப்படியான சூழலில் கேஸ் ஆன் செய்ததை மறந்துவிட்டு, ஈயை அடித்தார். அப்போது எலக்ட்ரிக் பேட்டில் இருந்து வந்த தீப்பொறியால், கேஸ் வெடித்துச் சிதறியது.
இதில் சமையலறை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. உடனே அங்கிருந்து லேசான காயங்களுடன் வெளியே வந்த அந்த மனிதர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது வீடு முழுவதும் சேதமடைந்தது. ஒரு சிறு ஈயை அடிக்க போய், வீடே நாசமான சம்பவம் பிரான்சில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Click for more
trending news