Read in English
This Article is From Jul 30, 2018

‘பிரதமர் மீது ஆசீட் வீசுவேன்’ என மிரட்டிய இளைஞர்..!? - மும்பையில் கைது

மும்பையில் வசித்து வரும் 22 வயது இளைஞர் ஒருவர் என்.எஸ்.ஜி-யை போனில் தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது

Advertisement
இந்தியா
Mumbai:

மும்பையில் வசித்து வரும் 22 வயது இளைஞர் ஒருவர் தேசிய பாதுகாப்புப் படையை (என்.எஸ்.ஜி) போனில் தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்படும் நபர், காசினாத் மண்டல் என்பதும் அவர் ஜார்கண்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் மும்பையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் மண்டல், புது டெல்லியில் இருக்கும் என்.எஸ்.ஜி படையின் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு என்னைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, ‘பிரதமர் மீது நான் ஆசிட் விசுவேன்’ என்று மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

மண்டல், மும்பையில் இருந்து அழைத்துள்ளார் என்பதை என்.எஸ்.ஜி கண்டுபிடித்து, உள்ளூர் காவல் நிலையத்தில் இது குறித்து தெரியபடுத்தியுள்ளது. 

Advertisement

இதையடுத்து மும்பை போலீஸ், மண்டலை தேடும் பணியை முடுக்கவிட்டுள்ளது. அவர், மும்பையின் வால்கேஷ்வர் பகுதியில் வசித்து வருவதை காவல்துறை கண்டுபிடித்தது. மும்பையின் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மண்டல், சூரத்துக்குப் போகும் ரயிலில் ஏற முற்பட்ட போது போலீஸ் அவரை கைது செய்தது. 

விசாரணையின் போது மண்டல், ஜார்கண்டைச் சேர்ந்த தனது நண்பர் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார் என்றும், அதனாலேயே மோடியைப் பார்க்க விரும்பியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என போலீஸ் கூறியுள்ளது. 

Advertisement

விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரைப் போலீஸ் கஸ்டடியில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 
 

Advertisement