“சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்கு முன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர்"
செவ்வாய் கிழமை இரவு, ஒரு நபர் ‘சொமேட்டோ' செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவு, முஸ்லிம் ஒருவரால் எடுத்து வரப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த அந்த நபர், தனது உணவை ரத்து செய்துள்ளார். மேலும் இது குறித்து பிதற்றலாக தனது ட்விட்டர் பக்கத்திலும் ஸ்க்ரீன்-ஷாட்களை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பிதற்றலுக்கு சொமேட்டோ நிறுவனம் பதிலடி கொடுத்து, நெட்டிசன்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
அமித் சுக்லா என்னும் அந்த நபர், “சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்கு முன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர். அவரை மாற்ற முடியாது என்று சொன்னார்கள். ரிஃபண்டு கொடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டனர்” என்று ட்விட்டர் மூலம் பகிர்ந்தார்.
தொடர்ந்து அமித் சுக்லா, சொமேட்டோ கஸ்டமர் கேருடன் தான் உரையாடியவற்றையெல்லாம் ஸ்க்ரீன்-ஷாட்களாக எடுத்து பகிர்ந்துள்ளார். மத்திய பிரதேச ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, இந்த விவகாரத்தை சும்மா விடப் போவதில்லை என்றும் வழக்கறிஞர்கள் அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரின் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்த சொமேட்டோ, “உணவுக்கு மதம் கிடையாது. உணவே மதம்” என்று கூறியுள்ளது. சொமேட்டோவின் இந்த ரிப்ளை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல், “இந்தியா என்கிற நாடு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்ட்னர்களின் பன்மைத்துவத்தை மதிக்கிறோம். எங்கள் கொள்கைக்கு எதிராக இருக்கும் ஒரு வியாபாரத்தை இழப்பதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
சொமேட்டோ கருத்துக்கு நெட்டிசன்களின் ஆதரவு:
What do you think of the incident? Let us know using the comments section.