சாமுவேல் கெம்ப் போனை பிடிக்கும் காட்சி
நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது மின்னல் வேக கேட்ச் பிடிக்கும் திறமைக்காக இணையத்தில் வைரலாகியுள்ளார். திமாருவைச் சேர்ந்த சாமுவேல் கெம்ப் ஸ்பெயினில் ரோலர் கோஸ்டரில் மணிக்கு 130 கி.மீ பயணிக்கும்போது வேறு ஒரு நபரின் மொபைலை துல்லியமாக கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடிக்கும் வீடியோவை யூடியூப்பில் பகிர்ந்ததும் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டதில் வைரலாகியுள்ளது.
கெம்ப் ஃபிஸ்ட்பாலிங்க் உலக சாம்பியன்ஷிப்பிற்காக ஸ்பெயினில் இருந்தார். அவர் குடும்பத்துடன் போர்ட் அவெஞ்சுரா தீம் பார்க்கிற்கு சென்றுள்ளார். அப்போது ரோலர் கோஸ்டரில் பயணித்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கெம்ப், ரோலர் கோஸ்டரில் செல்லத் தொடங்கும் போது மகிழ்ச்சியுடன் செல்கிறார். தனக்கு இரண்டு வரிசைக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் மொபைல் போன் வைத்து ரோலர் கோஸ்டரின் பயணிக்கத் தொடங்கினார். அது தவறி விழுவதைப் பார்த்தேன். அதனால்தான் அதை உடனடியாக பிடிக்க முடிந்தது என்று தெரிவித்தார்.
Click for more
trending news