ஜப்பானில் இந்த மீனின் மதிப்பு 3 மில்லியன் யூரோக்களாக இருந்திருக்கும்
அயர்லாந்து கடற்கரையில் 8.5 அடி உயரமுள்ள புளூஃபின் ட்யூனா வகை மீனைப் பிடித்து மீண்டும் கடலுக்குள் விடுவித்தார்.
வெஸ்ட் கார்க் சார்ட்டர்ஸைச் சேர்ந்த டேவ் எட்வர்ட்ஸ் மீனை பிடித்தார். ஐரிஸ் மிரர் அளித்த செய்தியின் படி, ஐரிஸ் கடற்கரையில் பிடிபட்டத்தில் மீன்களில் இதுவே மிகப்பெரியது. மேலும் ஜப்பானில் 3 மில்லியன் யூரோக்கள் வரை இதன் மதிப்பு இருந்திருக்கும்.
இருப்பினும் டேவ் எட்வர்ட்ஸ் மற்றும் அவரது குழு வணிக நோக்கத்திற்காக இந்த மீனை பிடிக்கவில்லை. அவை அட்லாண்டிக் கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கையை அறியவே பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமான ட்யூனா மீனின் படங்கள் வெஸ்ட் கார்க் சார்ட்டர்ஸால் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டன. அக்டோபர் 15 வரை இயங்கும் ‘கேட்ச் அண்ட் ரிலிஸ்' திட்டத்தில் பங்கேற்ற 15 படகுகளில் டேவ்வின் படகும் ஒன்றாகும் என்று எக்கோ லைவ் செய்தி தளம் தெரிவித்துள்ளது.
அவர்கள் பிடித்த மீன்களில் மிகப் பெரியவை இது தான். இதன் எடை 270 கிலோவாகும்.
Click for more
trending news