ஒரு கட்டத்தில் பிரசாந்த், தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, நரச்சிமலு, ஏரியின் ஆழமான பகுத்திக்குச் சென்றுள்ளார்.
Hyderabad: ஐதரபாத் நகரத்துக்கு வெளியே இருந்த ஏரி ஒன்றில், 2 வாலிபர்கள் குளித்துள்ளனர். அப்போது ஒருவர் டிக்-டாக் வீடியோ எடுக்க, இன்னொருவர் ஏரியின் அடி ஆழத்தில் சிக்கியுள்ளார். தொடர்ந்து அவரைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரசாந்த் என்னும் இளைஞர், 24 வயதாகும் அவரது உறவினரான நரசிம்மலுவைப் பார்க்க ஐதரபாத்துக்கு வந்துள்ளார். இருவரும் அருகில் இருக்கும் ஏரிக்குச் சென்று குளியல் போடலாம் என்று திட்டம் போட்டுள்ளனர். ஏரியில் சிறிது நேரம் குளித்த பின்னர், பிரசாந்த், டிக்-டாக் செயலி மூலம் வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் பிரசாந்த், தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, நரச்சிமலு, ஏரியின் ஆழமான பகுத்திக்குச் சென்றுள்ளார். பிரசாந்த், இதை உணராமல் தொடர்ந்து, வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்துக்கு மேலேதான், நரசிம்மலு ஆபத்தில் இருக்கிறார் என்பதை பிரசாந்த் உணர்ந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, செய்வதறியாமல் திகைத்த பிரசாந்த், ஏரிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து நரசிம்மலுவைக் காப்பாற்றுவதற்குள், நீரில் மூழ்கி அவர் இறந்துவிட்டார். நரசிம்மலுவுக்கு நீச்சல் தெரியாதது, இந்த சம்பத்துக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.