This Article is From Jul 29, 2018

புதுச்சேரியில், ஆள்மாறாட்டம் செய்து பல கோடி ரூபாய் மோசடி

மோசடியில் ஈடுபட்டதை குற்றவாளி ஓப்புக்கொண்டதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் குற்ற மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்

புதுச்சேரியில், ஆள்மாறாட்டம் செய்து பல கோடி ரூபாய் மோசடி
Kolkata:

கொல்கத்தா: ஆள்மாறாட்டம் செய்து ஆன்லைன் விற்பனை மூலம் கோடி ரூபாய்களை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம், துர்காபூர் பகுதியை சேர்ந்த ஷியாம் மைத்ரா என்ற நபர், செயில் எனப்படும் இந்திய உருக்கு ஆணையத்தின் உதவி பொது மேலாளர் என்று ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். செயில் நிறுவனத்தின் பொருட்களை வாங்க கோரி வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

35 மெட்ரிக் டன் ஆர்டர் பதிவு செய்துள்ள நிறுவனத்திடம், 100 மெட்ரிக் டன் பொருட்கள் மட்டுமே செயில் விற்பனை செய்கிறது என்று ஷியாம் தெரிவித்துள்ளார். எனவே, நிறுவனம் செலுத்திய 58.32 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி ஷியாம் மோசடி செய்துள்ளதார்.

இது குறித்து, கடந்த ஜூலை 26 ஆம் தேதி, பசுபதி இன்ஜினியரிங் என்ற நிறுவனம் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. கொல்கத்தா புறவழிச்சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் குற்றவாளி பதுங்கி இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.

ஹோட்டல் உரிமையாளர்களின் உதவியுடன், காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். புதுச்சேரி காவல் துறையினருடன் சிஐடி அதிகாரிகளும் விசாரணையயில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோசடியில் ஈடுபட்டதை குற்றவாளி ஓப்புக்கொண்டதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் குற்ற மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

.