This Article is From Jul 20, 2019

புயல் வேகத்தில் மோதிய சொகுசு கார்; 30 அடி தூக்கியெறியப்பட்ட நபர்- கதிகலங்கவைக்கும் வீடியோ!

இந்த விபத்தில் காயமடைந்த அபய் தாகர், ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்

ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள ஜேடிஏ வட்டம் சிக்னலில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • விபத்தில் காயமடைந்தவர் பெயர் அபய் தாகர்
  • காரை ஓட்டி வந்வர் சித்தார்த் ஷர்மா
  • ஷர்மா, கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்
Jaipur:

ஜெய்ப்பூரில் உள்ள டிராஃபிக் சிக்னல் ஒன்றை, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் கடக்க முயன்றுள்ளார். அப்போது, மறு முனையில் இருந்து வேகமாக வந்த ஆடி சொகுசு கார், அந்த நபர் மீது மோதியது. 

ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள ஜேடிஏ வட்டம் சிக்னலில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த சிக்னலில் கடந்த ஒரே வாரத்தில் நடக்கும் இரண்டாவது விபத்து இது. தற்போது நடந்துள்ள விபத்தின் சிசிடிவி வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் சொகுசு கார் மோதியவுடன், சுமார் 30 அடிக்கு இரு சக்கர வாகன ஓட்டி தூக்கியெறியப்படுவது தெரிகிறது. இந்த விபத்துக்குப் பிறகும் டிராஃபிக் தொடர்ந்து நகர்வதையும் பார்க்க முடிகிறது. 

இந்த விபத்து குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள துணை கமிஷனர், பிராஹ்லத் சந்த், “ஆடி சொகுசு காரை ஓட்டி வந்த சித்தார்த் ஷர்மா, விபத்து நடந்ததைத் தொடர்ந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த விபத்தில் காயமடைந்த அபய் தாகர், ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். அபய் தாகர் குடும்பத்தினர், ஷர்மாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இரண்டு பிடிவுகளின் கீழ் ஷர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் ஜேடிஏ சிக்னலில் வேகமாக வந்த கார், ஒரு கூட்டதின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் இருவர் இறந்துவிட்டனர். 6 பேருக்குக் காயம் ஏற்பட்டது. காரை ஓட்டி வந்தவர் விரேந்திர ஜெயின் என்றும், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

(PTI தகவல்களுடன்) 

.