Read in English
This Article is From Jul 04, 2019

3 வருடத்திற்கு முன் ஓடிப்போன கணவரை டிக்டாக் ஆப்பில் கண்டுபிடித்த மனைவி

மூன்று வருடத்திற்கு பின் 15 நொடி வீடியோ ஒன்றிற்கு டிக்டாக் ஆப்பில் நடனமிட்டுள்ளார். தன் கணவரின் வீடியோவை உறவினர்களிடம் காட்டியுள்ளார். உறவினர் காவல்துறைக்கு சென்று புகார் அளித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Edited by
Chennai:

கும்பமேளாவில் பிரிந்து போனவர்கள் மீண்டும் குடும்பத்தில் சேருவதற்கு கையில் பச்சை குத்தியிருந்து அதைக் காண்பித்து கண்டுபிடித்து ஒன்று சேர்வார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில் அதற்கு அவசியமே இல்லை. ஓடிப்போன கணவனை டிக்டாக் ஆப் மூலமாக கண்டுபிடித்துள்ளார். 


விழுப்புரம் மாவட்டத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பெண்ணொருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன் குடுபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் சுரேஷ் வீட்டை விட்டு சென்று விட்டார். 

மூன்று வருடத்திற்கு பின் 15 நொடி வீடியோ ஒன்றிற்கு டிக்டாக் ஆப்பில் நடனமிட்டுள்ளார். தன் கணவரின் வீடியோவை உறவினர்களிடம் காட்டியுள்ளார். உறவினர் காவல்துறைக்கு சென்று புகார் அளித்துள்ளார்.

Advertisement

விசாரணையில் இறங்கிய காவல்துறை 2016 ஆம் ஆண்டு முதல் சுரேஷ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இறுதியாக சுரேஷ் மீண்டும் தன் குடும்பத்துடன் வாழ ஒப்புக் கொண்டுள்ளார். 

டிக்டாக்கை பயன்படுத்தக் கூடாது என்று கணவன் மிரட்டியதற்காக அனிதா என்ற பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் கணவர் ஆறுமுகம் டிக்டாக்கை பயன்படுத்தக் கூடாது என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. 
 

Advertisement
Advertisement