The police have filed a murder case against the man. (Representational)
Srikakulam: சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகைகுளத்தில் நடந்துள்ளது.
இங்கு ராமதாசுபேடா கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் அவரது 58 வயதான தாயாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது.
தாய் தனக்கு சொந்தமான 2 வீடுகளை மருமகளின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதனை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு மகன் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது.
இதில் கட்டில் காலை எடுத்து மகன் தாயை பலமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் தாயார் உயிரிழந்தார்.
இதையடுத்து, மகன் போலீசில் சரண் அடைந்திருக்கிறார். இது சம்பந்தமாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.