This Article is From Nov 15, 2018

குடி போதையில் மகனே தாயை கொன்ற கொடூரம்!

குடிபோதையில் தனது தாயுடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டதால் தனது தாய்யை செங்களால் தாக்கினார்

குடி போதையில் மகனே தாயை கொன்ற கொடூரம்!
Jhansi:

கடந்த நவம்பர் 3 ஆம் கொலை செய்யப்பட்ட 75 வயது பெண்னின் வழக்கை விசாரித்த போலீசார்க்கு கிடைத்த தகவல்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்ததுள்ளது.

உத்திர பிரதேசத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் நடந்த இந்த கோரச்சம்பவத்தில் பலியானா ராஜ்குமாரியின் மகனான பகவான் தாஸ் ஒரு குடிகாரர்.

குடிபோதையில் தனது தாயுடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டதால் தனது தாய்யை செங்களால் தாக்கினார். பலமாக தாக்கப்பட்ட ராஜ்குமாரி சம்பவயிடத்திலே உயிரிழந்தார். போலீஸ் விசாரணையின் போது இதை மறைத்து தாஸ் தானாகவே ஒரு பொய்கதையை உருவாக்கி வேறு எட்டு பேரின் மீது பழியை சுமத்தினார். பின்னர் போலீஸார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை தீவரமாக விசாரிக்க தொடங்கினர்.

பின்னர் தாமாகவே ஓப்புக்கொண்டார். இதைதொடர்ந்து நீதிமன்றத்துக்கு முன் ஆஜராக்கப்பட்ட பகவான் தாஸ் தற்பொழுது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பெற்ற மகனே தாயைக் கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

.