This Article is From Jul 25, 2019

பஞ்சி ஜம்பிங் - 330 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த மனிதர்: வீடியோ!

இந்த வருத்தமளிக்கும் காட்சிகள், அந்த மனிதர் பஞ்சி கயிறு அறுந்து கீழே விழுந்த தருணத்தை கைப்பற்றியுள்ளன.

பஞ்சி ஜம்பிங் - 330 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த மனிதர்: வீடியோ!

330 அடியிலிருந்து பஞ்சி கயிறு அறுபட்டி தரையில் விழுந்தார்.

போலந்து நாட்டில் 330 அடி உயர பஞ்சி ஜம்பிங்கில் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவரது பஞ்சி கயிறு அறுபட்டி தரையில் விழுந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. 39 வயதான அவர், கீழே விழுந்ததில் முதுகில் சில காயங்களுடன் உயிர் தப்பியதாக மெட்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை க்டினியாவில் (Gdynia) உள்ள ஒரு தீம் பார்க்கில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தின் வருத்தமளிக்கும் காட்சிகள், அந்த மனிதர் பஞ்சி கயிறு அறுந்து கீழே விழுந்த தருணத்தை கைப்பற்றியுள்ளன. அவர் அந்த 330 அடி உயர பஞ்சீ ஜம்பிங் மேடையில் இருந்து குதித்தபின், பாதி வழியில் கயிறு அறுபட்டு தரையில் விழுகிறார். அவர் காற்று நிறப்பட்ட ஒரு பெரிய பைய்யின் மேல் விழுந்ததால் எந்த ஒரு பெரிய காயங்களும் இன்றி தப்பிக்கிறார்.

மெட்ரோ தகவலின்படி, அந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறை அதிகாரி க்ரிஸ்ஸ்டோஃப் குஸ்மியர்சிக் ( Krzysztof Kusmierczyk), அந்த நபருக்கு "கண்ணில் தென்படும் காயங்கள்" எதுவும் இல்லை, ஆனால் பல உறுப்பு செயலிழந்துள்ளன மற்றும் முதுகெலும்பு முறிந்துள்ளதாக கூறியுள்ளார்.

விபத்து ஏற்பட்ட உடனேயே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அவருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ள காரணத்தால், முழுவதுமாக குணமடைந்த பிறகே, முழு இயக்கத்தையும் மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று லாடிபிள் தெரிவித்துள்ளது. 

இந்த பஞ்சி ஜம்பிங்கிற்கு ஏற்பாடு செய்த நிறுவனமான பஞ்சிகிளப் (Bungeeclub) ஒரு பேஸ்புக் பதிவில், அந்த நபர் புதன்கிழமை மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியேறிவிட்டார் என்றும் அவர் தனியாகவே நடக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

Click for more trending news


.